சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்ம மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை வழங்கவும், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகஅரசின் இதுபோன்ற அறிவிப்புகள், கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம், அதைத்தொடர்ந்து வன்முறைகள் – சேதங்கள் அனைத்தும் நீர்த்துப்போக செய்துவிடும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனம் காரணமாக, 4வது நாள் வன்முறை வெடித்தது. அதாவது, கடந்த 17ந்தேதி, மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் க வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள், வாங்கள் சேதமடைந்தன. ஒரு கும்பல் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர்கள் கள்ளக்குறிச்சி சென்று நேரில் ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை அளித்தனர். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரம், காவல்துறை எஸ்.பி.யுடன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளக்குறிச்சி பள்ளி அறையில் வைக்கப்பட்ட தீயில், மாணவர்களின் மாற்று சான்றிதழ் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்து உள்ளன. வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வோம். மாணவர்களுக்கு தற்காலிக மாற்று சான்றிதழ் எளிதில் வழங்க முடியும். மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் முதல்வருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். அந்த பள்ளியின் அருகே 5 அரசு பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்களை பயன்படுத்த முடியுமா? என முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
மேலும், மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.