டெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, பிப்ரவரி 1ம் தேதிக்கு பின்னர், காலாவதி ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
செப்டம்பர் 30ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்கான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காலம் என்பது முழுமையாக நீங்கவில்லை. அதை கருத்தில் கொண்டு இந்த அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.