சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை சீராக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னையில் 35 வயதான அரசு மருத்துவர் ஒருவர் மே மாதம் கோவிட் -19 உறுதியாகி, பின்னர் குணமடைந்து விட்டார். ஆனால், அவருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் இருந்து பல்வேறு மீண்டும் நோய்தொற்று ஏற்படும் நிகழ்வுகள் பதிவாகி இருந்தாலும், இந்த நிகழ்வைப் பற்றி இன்னும் ஆய்வு செய்யத் தொடங்கவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் இத்தகைய நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள், ஏனெனில் நோயிலிருந்து மீண்ட பிறகு, ஒரு நபரிடமிருந்து வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப் பற்றி ஆய்ந்து அறியலாம்.
மகளிர் மருத்துவ நிபுணரான அந்தப் பெண், மே 28 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டபோது பணியில் இருந்தார். அவரது கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். பின்னர், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. வேறு கூடுதல் அறிகுறிகள் எதுவும் இல்லை. பின்னர், 14 நாட்கள் சிகிஹ்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மீண்டும் பணிக்கு திரும்பிய அவர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு, கொரோனா அறிகுறிகளை காட்டியதாக கூறப்படுகிறது.
ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகையில், “பல மருத்துவர்கள் மீண்டும் ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அறிக்கையிட்டு வருகின்றனர். பழைய மாதிரிகள் மற்றும் தற்போதைய மாதிரியின் மரபணு வரிசைமுறைகளை ஒப்பிட்டாவிட்டால், அதை நாங்கள் உறுதிப்படுத்த முடியாது. இதன் பொருள் சோதனைக்கு தேவையான மாதிரிகள் கிடைக்க வேண்டும். மறு தொற்று ஏற்பட்டதற்கான உரிய ஆதாரங்கள் கிடைக்காவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றார். இவர் கோவிட் கோவிட் -19 குறித்த மாநில அரசின் நிபுணர் குழுவில் உறுப்பினராக உள்ளார். வைரஸால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகள் குறுகிய காலம் மட்டுமே செயல்படும் என்று மாநிலத்தின் முதல் பிளாஸ்மா வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் பரிந்துரைத்திருந்ததை நினைவு கூறலாம்.