சிங்க்ரவுலி

மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவர் தனது மனைவியில் மாதிரிகளை பணிப்பெண்ணின் பெயரில் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில சிங்க்ரவுலியை சேர்ந்த அரசு மருத்துவர் அபய் ரஞ்சன் சிங் கடந்த 23 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார். அதற்கு அவர் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவில்லை.  ஜூலை 1 ஆம் தேதி திரும்பி வந்த அவர் தன்னை தனிமைப்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன.  அவருடைய ரத்த மாதிரியை அபய் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் பெயரில் அனுப்பி உள்ளார்.  மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதையடுத்து மருத்துவர் செய்த ஆள்மாறாட்ட மோசடி வெளி வந்தது.  அதன் பிறகு அபய் சிங் மற்றும் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி அருண் பாண்டே, “நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை தனிமைப்படுத்தச் சென்ற போது அந்த மாதிரி அவருடையது அல்ல என்பதும் மருத்துவர் மனைவியுடையது எனவும் தெரியவந்தது.  மருத்துவர் அபய் மீது தொற்றுநோய் பரவல் மற்றும் பேரிடர் விதி மீறல் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  அவர் கொரோனாவில் இருந்து குணமானதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” எனத் தெரிவித்துள்ளார்.