டெல்லி: ஆன்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ், மல்டி வைட்டமின் மருந்துகள் உள்பட 156 வகை மருந்துகளுக்கு தடை விதி்த்து  மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காய்ச்சல் மற்றும் சளிக்கு வழங்கப்படும் பாராசிட்டமால்  மற்றும்  வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 நிலையான டோஸ் கலவை மருந்துகளை அரசாங்கம்  தடை செய்தது, அவை ‘மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’ என்று கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம்  முழுவதும் விற்பனையாகும் ஆன்டிபயாடிக், மல்டி வைட்டமின் மற்றும் வலி நிவாரணி மருந்துகளால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாகபுகார்கள் உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்துவரும் அரசின் மருத்துவ நிறுவனங்கள், பல மருந்துகள் விற்பனை மற்றும் உட்கொள்ள தடைகளை விதித்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதால், அதை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மக்களிடையே பிரபலமான  பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படூம,  Aceclofenac 50mg+ paracetamol 125mg மாத்திரையை தடை செய்துள்ளது. பாராசிட்டாமல் வகையை சேர்ந்த 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் இந்த மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது,  மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940ன் பிரிவு 26 A-ன் கீழ் இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்யும் அரசிதழ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.  “இந்த விவகாரத்தை மத்திய அரசு மற்றும் DTAB நியமித்த நிபுணர் குழு ஆய்வு செய்தது. கூறப்பட்ட FDC களில் உள்ள பொருட்களுக்கு எந்த சிகிச்சை நியாயமும் இல்லை என்று இரு அமைப்புகளும் பரிந்துரைக்கின்றன.

இந்த பட்டியலில் மெஃபெனாமிக் அமிலம் பாராசிட்டமால் ஊசி, செடிரிசின் எச்.சி.எல் பாராசிட்டமால் ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல், லெவோசெடிரைசின் ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் பாராசிட்டமால், பாராசிட்டமால் குளோர்பெனிரமைன் மாலேட் ஃபீனைல் ப்ரோபனோலமைன் மற்றும் கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால் 30 ஆகியவை அடங்கும்.

பாராசிட்டமால், டிராமடோல், டாரின் மற்றும் காஃபின் ஆகியவற்றின் கலவையையும் அரசாங்கம் தடை செய்தது. டிராமடோல் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி. “ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் மருந்தைப் பயன்படுத்துவது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதில் மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது, அதேசமயம் இந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் உள்ளன” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை தடை செய்வது பொது நலன் கருதி அவசியமானதும் பயனுள்ளதுமாகும் என்பதில் மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது. பல மருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே நிறுத்திய சில தயாரிப்புகளும் பட்டியலில் அடங்கும். ஜூன் 2023 இல், அந்த 344 மருந்து சேர்க்கைகளின் ஒரு பகுதியாக இருந்த 14 FDC கள் தடை செய்யப்பட்டன.

2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, 344 மருந்து சேர்க்கைகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.