அரசின் கருணைப்பார்வையில் இந்திய ஸ்டீல் நிறுவனங்கள்:
steel1
எஃகுத் துறை சந்தித்து வரும் சவால்களை சரிகட்ட மத்திய அரசு செய்யவேண்டியது குறித்து எஃகு மற்றும் நிதி அமைச்சகங்கள் இணைந்து பேச்சுவார்தை நடத்தி வருவதாகவும் அடுத்த இரண்டு மாதங்களில் இறுதிவடிவம் பெறும் எனவும் ஸ்டீல் செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.

 
steel3
புது தில்லி: அரசு எஃகு துறையினர் வாங்கியுள்ள வங்கிக் கடன் அவர்களது முன்னேற்றத்தினை தடுக்காத வகையிலும், னட்ட்த்தில் இயங்கும் எஃகுத் துறைக்கு உதவிட ஒரு புதிய நிதிதொகுப்பினைத் தயாரித்து வருகிறது
திங்களன்று சிஎன்பிசி டிவி 18-மின்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அருணா சுந்தரராஜன் “சர்வதேச முதலீட்டாளர்களை உள்நாட்டு எஃகு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பது உட்பட பல வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.
steel2
“வங்கிகள் மீட்கக்கூடிய முன்னுரிமைப் பங்குகள் போன்ற சில சமபங்குகளை எடுத்துக்கொண்டு, பிறகு நிறுவனங்கள் அவர்களை மீட்க போதுமான நேரம் கொடுப்பது போன்ற முன்மொழிவுகளையும், மற்றொரு தீர்வாக, பன்னாட்டு நிதி முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் எஃகு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதியளித்து , எஃகு நிறுவனங்களில் னலாபத்தை ஈட்டியப் பிறகு, அவர்கள் முதல்லீடைத் திரும்பத் தந்துவிடுவதும் பரிசீலனையில் உள்ளது” அருணா சுந்தரராஜன் கூறினார்.
Aruna
“மேலும் நாங்கள், சில  சர்வதேச  அல்லது வெளி முதலீட்டாளர்கள் கொண்டு இந்த எஃகு நிறுவனங்களில்  புதிய பங்குகளை முதலீடு செய்ய வைப்பது குறித்தும் சிந்தித்து வருகின்றோம். சர்வதேச முதலீட்டாளர்களும் இதில் நல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர் “என அவர் மேலும் தெரிவித்தார்.