சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு போதுமான ஆய்வங்கள் இல்லை. தமிழகத்தில் இரண்டே இரண்டு ஆய்வகங்கள் மட்டுமே உள்ள நிலையில், நாடு முழுவதும் 72 ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன. இதனால், கொரோனா நோய் தொற்று உறுதி செய்வதில் கால தாமதம் ஆகிறது.
இதன் காரணமாக, தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்), பயோடெக்னாலஜி துறை (டி.பி.டி), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு போன்ற அரசால் நடத்தப்படும் மேலும் 49 அரசு ஆய்வகங்கள் இந்த வார இறுதிக்குள், கொரோனா வைரஸ் சோதனையை தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனியார் சோதனைக்கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இனிமேல் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு செய்ய முடியும்.. ஆனால், அதற்கான கட்டண விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை…