புதுடெல்லி:
மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகளை விளக்கும் வகையில் ஏப்ரல் 24 அன்று வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தவறு நடந்து விட்டது. தவறான கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை நான் கண்டிப்பாக கேட்டாக வேண்டும் என்பதாலேயே மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் மாநாடுகளில் ஒன்றான ‘இந்தியா கொரோனா வெடிப்பை திறம்பட சமாளிக்கிறது’ (‘India tackles the Covid-19 outbreak effectively’) என்ற தலைப்பில் விளக்கக்காட்சியின் போது பவுல் கேள்விக்குரிய வரைபடத்தைக் காண்பித்தார்.
இந்த விளக்கக்காட்சி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலர் வரைபடத்தை பார்த்து இது நம்பமுடியாததாக இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து பேசிய வி.கே.பால் , வரைபடத்தில் உள்ளவை கணிக்கப்பட்டவைகள், இந்த கணித தரவைக் காண்பிக்கும் போது, அதன் அடிப்படை காட்டப்படுவது நமது கடமையாகும். ஆனால் அந்த டிரான்ஸ்கிரிப்டை நான் பூஜ்ஜியமாக சொல்லவில்லை என்றும், இது அனைத்தும் உருவாக்கப்பட்ட கருத்து”என்று அவர் கூறினார்.
கணிப்புகள் தவறாகி விட்டன
கடந்த ஏப்ரல் 24 அன்று வழங்கப்பட்ட வரைபடம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏப்ரல் 30 க்குள் அதிகரிக்கும் என்றும் மே முதல் வாரத்தில் சரிவு காணும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த வி.கே.பால், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு, சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் மூலம், 14 – 29 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல் படுத்தப்படாமல் இருந்தால், நம் நாட்டில், 37 ஆயிரத்திலிருந்து, 78 ஆயிரம் பேர் வரை, வைரஸ் பாதிப்புக்கு பலியாகி இருப்பர். ஊரடங்கு காரணமாக, ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு ஆய்வுகள் மூலம், இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பும் அபாரமானது.
ஊரடங்கு காலத்தை வைரஸ் தடுப்பு நடவடிக்கைளுக்கு, சுகாதாரத் துறை முழுமையாக பயன்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே, மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் பாதிப்பு குறைவாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இருப்பினும், மே 16 க்குள், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அது ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும், கணிப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கடந்த வியாழக்கிழமை நடந்த மாநாட்டில் அவர் பதிலளிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு உயரக்கூடும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு எச்சரிக்கையுடன் பதிலளித்த வி. கே. பால், உண்மையான பாதிப்பு எண்ணிகையை கணக்கிட முடியாது. அது சமூகம் மற்றும் மக்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொருத்தே அமையும் என்றார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்த சூழலில், அதன் எண்ணிக்கையும் மூவாயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41 ஆயிரத்து 642 பேரும், தமிழகத்தில் 13 ஆயிரத்து 967 பேரும், குஜராத்தில் 12 ஆயிரத்து 905 பேரும், டெல்லியில் 11 ஆயிரத்து 659 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.