சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது.

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், தொடக்கத்திலேயே தேசிய கீதத்தை பாட  ஆளுநர் வலியுறுத்திய நிலையில், அதை  ஏற்காமல் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அளித்தார். இதையடுத்து,  கடந்த 2 ஆண்டு களைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி. சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,  சட்டப்பேரவையில் இருந்து   தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து  ஆளுநர் மாளிகையான  மக்கள் மாளிகை தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது.

 இதுதொடர்பாக விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  • மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் தடையின்றி பேச அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) பலமுறை அணைக்கப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
  • ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் உள்ளன. மக்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
  • அரசின் தயாரிக்கப்பட்ட உரையில் பல ஆதாரமற்ற மற்றும் வழிதவற வைக்கும் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
  • மாநிலம் ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறப்படுவது உண்மையிலிருந்து வெகுவாக விலகியுள்ளது. முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) ஆவணங்களாக மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதியே. முதலீட்டு தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்குப் போதிய ஈர்ப்பை இழந்து வருவதை காட்டுகின்றன.
  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்களுக்குள் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று ஆறாவது இடத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வருங்கால முதலீட்டாளர்கள் உடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், காகித அளவிலேயே உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோவில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
  • பண்டைய கோவில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டு களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அக்கறையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர்கள் தீர்க்கப்படாத நியாயமான கோரிக்கைகளால் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் உரையில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும், போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
  • போதைப்பொருள் காரணமாக ஓராண்டில் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும்,
  • பட்டியலின மக்களுக்கு எதிரான அட்டூழியங்களும், பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது; இது அரசாங்கத்திற்கு கவலையளிப்பதாக தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ரயில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் கல்வி தரம் தொடர்ந்து சரிந்து வருவதுடன், கல்வி நிறுவனங் களில் குறைபாடுகள் காணப்படுவது குறித்து அரசின் அறிக்கையில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • கல்வித் தரத்தில் தொடர் சரிவைக் கண்டு இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. 50% ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
  • பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளன. இது குறித்து அந்த உரையில் ஒரு குறிப்புகூட இல்லை.
  • தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]