ஐதராபாத்: கொரோனா விவகாரத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை கடுமையாக எச்சரித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன்.
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் குறித்த உண்மைகளை மறைத்ததாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. இது குறித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை கடுமையாக எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நிஜாம் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று நான் பார்த்தேன். அங்கு பல மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மருத்துவராக இருந்ததால் என்னால் அதை அறிய முடிகிறது. இந்த விஷயத்தில் மாநில சுகாதாரத் துறை மிகவும் கவலை கொண்டுள்ளது.
கொரோனா நிலைமை குறித்த எனது கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நான் மாநில அரசுக்கு தெரிவித்து வருகிறேன் என்றார். மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சோதனையை அதிகரிக்கவும், நோயின் அளவு மற்றும் தாக்கம் குறித்த சரியான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர் மாநில அரசுக்கு எழுதிய பல கடிதங்களுக்கு அரசாங்கத்தின் பதிலும் இதேபோல் மந்தமாக உள்ளது.
தெலுங்கானாவில் கொரோனா நிலைமை குறித்து விரிவான தினசரி அறிக்கை கிடைக்க பெறகிறீர்களா என்று கேட்ட போது, ஆளுநர் தமிழிசை சிரித்துக் கொண்டே கூறினார். சுகாதாரத் துறையிடமிருந்து அந்த நாளின் முடிவில் எனக்கு ஒரு அறிக்கை கிடைக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக நான் பல கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் மாநில அரசாங்கத்தின் பதில் திருப்திகரமாக இருந்தது கிடையாது. அடிப்படை தகவல்கள் கூட பகிரப்படவில்லை. இனி அமைதியாக இருக்க முடியாது.
அதனால்தான், நிஜாம் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்று, மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். ஏனென்றால் அவர்கள் சமூகத்தில் மற்றவர்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஒரு மருத்துவ நிபுணராக, சென்றபோது ஏற்படும் ஆபத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு சக மருத்துவர் என்ற முறையில், எனது ஆதரவை வெளிப்படுத்தவும், அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கவும், நான் அவர்களுடன் இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கவும் விரும்பினேன் என்றார்.
கொரோனா வார்டுக்கு வருவது குறித்து தெரிவிக்கப்பட்ட போது அவரது கண்டு நிம்ஸ் மற்றும் மாநில சுகாதாரத் துறையின் அதிகாரிகள் திகைத்து, அவரைத் தடுக்க முயன்றனர். 2019ம் ஆண்டில் தெலுங்கானாவின் ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்தார். தெலுங்கானா மாநிலத்தில் இப்போது 3900 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.