டெல்லி: தமிழக ஆளுநரை திரும்பபெற வேண்டும் என  தமிழக எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு  குடியரசு தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சமீப காலமாக ஆளுநர் ரவி, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடுக்கிறார். மேலும், தமிழகஅரசின் பல மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால்,  ஆளுநர் ஆர்.என்.ரவியைதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன.

அதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.  அந்த மனுவில், அக்டோபர் 31ஆம் தேதி வரை ஒப்புதல் தராமல் 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாக புகார் கூறப்பட்டிருக்கிறது. மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுவதாகவும் ஆளுநர் ஆர். என். ரவி மீது புகார் கூறப்பட்டிருக்கிறது. மேலும், ஆளுநர் ஆர்.என். ரவி மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரpசன் கொள்கை அளவிலும் செயல்பாட்டு அளவில் எதிர்ப்பது அரசமைப்பு சட்டத்தை மீறுவது ஆகும் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .