சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிரான அவையில் கோஷம் எழுப்பியதுடன், தேசிய கீதம் பாடவில்லை என கூறி, கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும், அரசியல் சட்டமும் தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்’ என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மீது கண்டனம் தீர்மானம் கொண்டு வந்து அவையின் மூத்த உறுப்பினராக அமைச்சர் துரைமுருகன் கொண்டு பேசினார். அப்போது, “ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்;
தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் மாறாத பற்று கொண்டது. ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை; முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். ஆனால், ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்;
கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தும் சில வாசகங்களை சேர்த்தும் ஆர்.என்.ரவி படித்தார்; 2023-ம் ஆண்டே ஆளுநரின் செயல்பாட்டுக்கு பேரவையிலேயே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார்; ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது; 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.