கோயம்புத்தூர்

மிழக ஆளுநர் ஆர் என் ரவி கோவையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.

இன்று கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளின் விமானப் படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.  இந்த கண்காட்சியில் 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.

வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.