சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்  ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழ்நாடு  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர். என். ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி முதலமைச்சர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக (Chancellor) செயல்படுவார் என்றும், சென்னையில் உள்ள மாதவரத்தில் ஒரு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவவும் முடிவு செய்து குறிப்பிடப்பட்டிருந்தது  ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், ல திருத்தங்களுக்கான பரிந்துரைகளுடனும் திருப்பி அனுப்பியிருந்தார்.

இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, ஆளுநரின் கேள்விகளுக்கு  பதிலளிக்கும் விதமாக, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தமார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானத்தின்மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் இந்த தலையீட்டை “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று விமர்சித்தார். ஆளுநரின் கருத்துகள் மற்றும் சபையின் கண்ணியத்தைக் குறைக்கும் வார்த்தைகள் அடங்கிய பகுதிகளை சட்டமன்றம் நிராகரித்துள்ளதாக அவர் கூறினார். மேலும், ஒரு மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே ஆளுநர் தனது கருத்தை வெளிப்படுத்த அதிகாரம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே சட்டம் கொண்டு வரவோ அல்லது திருத்தவோ அதிகாரம் உண்டு. எனவே, அவரது செய்தியில் உள்ள கருத்துகளை இந்தச் சபை ஏற்க முடியாது,”

 அதன் பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருத்தப்பட்ட வரைவை “தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025” என்ற பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தினார். பின்னர் இது ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த ஆளுநர், இந்த மசோதாவை குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, ஆளுநர் மற்றும், குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்பதால், ஆளுநர் மசோதாவை கிடப்பில் போடும் நோக்கில், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம்! சட்ட மசோதா நிறைவேற்றம்