சென்னை:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தணிந்தாலும் மக்களிடையே சோகம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒபிஎஸ் தூத்துக்குடி சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதை தொடர்ந்து, நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலைக்கு சீலை வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலாலும் தூத்துக்கு சென்று, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் நலம் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்பபட்டது.
அதன்படி இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்ட சென்றார்.