நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன்(Ezhumalai Venkatesan)  அவர்களின் முகநூல் பதிவு:

முதலில் இந்த கவர்னர் காமெடிக்கு முடிவுக்கு கட்டணும்..

பெரும்பான்மை இருக்கிறதுன்னு சொன்னா. உடனே அவரை கவர்னர் கூப்பிட்டு ஆட்சி அமைன்னு சொல்லுவாராம். 15 நாள்ல மெஜாரிட்டிய நிரூபிச்சா போதும்ணு சொல்லிடுவாரு..மெஜாரிட்டிய நிரூபிக்கிறாரோ இல்லையே அதுவரைக்கும் அவர் முதலமைச்சரு..

கொஞ்சம் பணம் புழங்கற இடத்துலு உக்கார்ற ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கே டெபாசிட் தொகை வாங்கிட்டுத்தான் உக்கார வெக்கிறனானுங்க..

இவுங்க என்னடான்னு எம்எல்ஏவுங்க கையெழுத்து இதான்னு ஒரு பட்டியல் குடுத்தாபோதும், உடனே ஆட்சியையே தூக்கி கைல அலேக்கா குடுத்துடறாங்க

நேர்ல பார்த்து தலையை எண்ணிகிட்டு அப்புறம்தான் ஆட்சிய குடுக்கறது.. ரெண்டாம் கட்டமா உடனே சட்டசபையிலேயும் ஒருமுறை மெஜாரிட்டி காட்டிடுங்கப்பா சொல்லிடவேண்டியதுதானே

கவர்னர் புடுங்கறதே ஒரேயொரு ஆணிதான்..அந்த ஒன்னையாவது சரியா புடுங்கறதைவிட்டுட்டு அப்படி என்ன வெட்டிமுறிக்கப்போறாரு

முதற்கட்ட வெரிஃபிகேஷனுக்கு எம்எல்ஏவுங்க வந்து அசெம்பிள் ஆவுறதுக்குகூடவா கவர்னர் மாளிகைல இடமில்லை..

அது என்ன ராஜ்பவனா, இல்ல சந்துபொந்துல இருக்கிற ரெண்டே ரெண்டு டேபிள்போட்ட சந்திரபவன் ஓட்டலா?

[youtube-feed feed=1]