சென்னை
ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்/

தமிழக ஆளுநர் 10 சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்ரம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதம் நடைபெற்று வருகிற்து
இன்று, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் எனத் தகவல்கல் வந்துள்ளன,
அதன்படி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கும், தமிழக பொது கட்டிட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel