வாரனாசி:

மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையின் கீழ் இந்திய குடிமக்களுக்கு சிப்-அடிப்படை யிலான இ-பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான வேலை  நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

இன்று வாரணாசியில் நடைபெற்ற பிரவசி பாரதீய திவாஸ் (பிபிடி)  எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் பேசிய மோடி இந்தியாவில் இ-பாஸ்போர்ட் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என்றும்,  உலகம் முழுவதும் பாஸ்போர்ட் சேவா திட்டத்துடன் இந்திய நாட்டின்   தூதரகங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

இ- பாஸ்போர்ட் முறை விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று வெளிவுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மத்திய பாஸ்போர்ட் முறையின் கீழ் இந்திய குடிமக்களுக்கு சிப்-அடிப்படையிலான இ-பாஸ்போர்ட் களை வழங்கப்படும் என்றும், நமது நாட்டு  தூதரகங்கள்  உலகம் முழுவதும் பாஸ்போர்ட் சேவா திட்டத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றன.. தற்போது சிப்-அடிப்படையிலான மின்-பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு வேலை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக  இந்திய குடிமக்கள் (PIO) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டைகளுக்கு விசாக்கள் வழங்குவதற்கான செயல்முறையை சுலபமாகும் என்றும் கூறினார். தற்போது வெளிநாடுகளில் வாழும் எங்கு இந்தியர்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான். நமது ஆற்றல் மற்றும் திறமைகளின் அடையாளமாக அவர்கள் திகழ்கின்றனர் என தெரிவித்தார். மொரீஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்கள் தலைமை பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர்., நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் பாஜக அரசு போராடி வருவதாக பேசினார்.

அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று அடைவதில்லை என குறிப்பிட்டு பேசிய அவர்., தற்போது நடந்து வரும் பாஜக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் மக்களிடன் முழுமையாக சென்று அடைகிறது எனவும் தெரிவித்தார்.

இந்த இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதில் சம்பந்தப்பட்டவர் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெறும். இதன் காரணமாக இந்த போலி பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட்டில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே உலக நாடுகளில், 60க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு மேல் இ-பாஸ்போர்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ள  நிலையில் இந்தியாவிற்கு இனிமேல் தான் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.