டில்லி:
‘‘தனி நபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையே’’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்து உள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கில் தனி நபர் சுதந்திரம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கூறியது.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை கொண்டுவந்த போது கூறியதையே, தற்போது உச்சநீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனி நபர் உரிமையானது அடிப்படையான உரிமையாகும்’’ என்றார்.
இது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு ரவிசங்கர் பிரசாத் பதில் கூறுகையில், ‘‘இந்த முடிவு பாசிச படைகளுக்கு பெரிய அடி. கண்காணிப்பு மூலமான அடக்குமுறை என்ற பாரதீய ஜனதாவின் கொள்கையை நிராகரிக்கும் ஒலியாகும்.
நெருக்கடி நிலையின் போது தனிப்பட்ட சுதந்திரங்களை பாதுகாத்தலில் காங்கிரஸ் சாதனை படைத்து உள்ளது” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்