தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் வட்டார, தாலுக்கா, மாவட்ட, மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.

இதன் ஒரு பகுதியாக 25 மாணவ-மாணவிகள் அடங்கிய குழுவினர் நேற்று மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.

இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுடன் மலேசியா நாட்டில் பயணித்து வருகின்றோம்.

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!” என்று பதிவிட்டுள்ளார்.