சென்னை:
ர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களும், அழைப்பு விடுத்தன. இதற்கு பெரும்பாலான கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது பற்றி ஆளும் அ.தி.மு.க. ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரம், நாலை அரசு அலுவலகங்கள், பேருந்துகள் முழு அளவில் இயங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

இதை உறுதிப்படுத்துவது போல, அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “நாளை இயக்கப்படும் அரசு பஸ்களுக்கும், பஸ் டெப்போக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், “நாளை காலை 6 மணிக்கு முழு அடைப்பு தொடங்குவதால் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காலை 5 மணிக்கே போலீசார் பணிக்கு வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.