மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில்  தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கோ​யில் சொத்​துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக  பத்​திரப்​ப​திவு செய்​யும் வகை​யில் கடந்த 2025ம் ஆண்டு திமுக அரசு பிறப்​பித்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த அரசாணையாது, கோவில் சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்வதற்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,  சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில்  வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  தமிழகத்​தில் கோயில் நிலங்​களை பாது​காக்​கும் வகை​யில் பத்​திரப் பதிவுத் துறை​யில் கோயில் நிலங்​களின் மதிப்​பீட்டை ‘பூஜ்ஜி​யம் மதிப்​பு’ எனபதிவு செய்​யப்​படு​வது வழக்​கம். இதனால் கோயில் நிலங்​களை வேறு யாரும் பத்​திரம் பதிவு செய்​ய​வோ, பட்டா பெறவோ முடி​யாது. கோயில் நிலங்​களை யாராவது பத்​திரப்​ப​திவு செய்ய முயன்​றால் பதிவுத்​துறை​யில் புகார் அளித்து பதிவு ரத்து அல்​லது பதிவு நிறுத்​தம் செய்து வைக்​கப்​படும்.

ஆனால்,  தமிழ்நாடு அரசின்  வரு​வாய்த்​துறை 2025-ம் ஆண்டு ஆக.29-ந்தேதி, கோயில் சொத்​துகளை பத்​திரப்​ப​திவு செய்​ய​வும், பட்டா பெற​வும் வழி​வகை செய்​யும் வகை​யில் அரசாணை பிறப்​பித்​துள்​ளது.

இந்த அரசாணை அடிப்​படை​யில் கோயில் சொத்துகள் தொடர்​பாக முறை​யீடு செய்ய வேண்​டும் என்​றால், மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் கொண்ட குழு​விடம்​தான் முறையிட முடி​யும். இந்த அரசாணை கோயில் சொத்​துகள் தனி​நபர்​களுக்கு எளி​தாகப் பெயர் மாற்​றம் செய்ய வழி​வகுக்​கிறது. இது சட்​ட​விரோதம். இது அரசி​யலமைப்புச் சட்​டத்​துக்கு எதிரானது. பட்டா நிலம், மானிய நிலம், ஊழிய நிலம் என்ற வகைப்​பாடு​களில் கோயில் நிலங்​கள் உள்​ளன. புதிய அரசாணை​யால் கோயில் சொத்​துகள் பறி​போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

அதனால் அரசாணையை ரத்து செய்​தும், அது​வரை அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த 2 நீதிப​தி​கள் அமர்வு அரசாணையை செயல்​படுத்த இடைக்​கால தடை விதித்து உத்​தர​விட்​டது. இதையடுத்து வழக்கு மீண்டும், மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில்  மார்ச் 25ந்தேதி  மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கிறஞர், கோவில் சொத்துக்கள் பத்திரபதிவு செய்வது தொடர்பான அந்த அரசாணை திரும்ப பெறப்​பட்​டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  வழக்கை முடித்து, மனுவை நீதிபதிகள் தள்​ளுபடி செய்தனர்.

[youtube-feed feed=1]