சென்னை: தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பாக, தியாகியை நீதிமன்றத்தை நாடச்செய்ததற்கு அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக்கோரி 99 வயது முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தியாகியை நீதிமன்றத்தை நாடச்செய்த செயலற்ற தன்மைக்காக அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது தியாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தான் சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் வழங்கியும், தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.