சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே இந்த மாத சம்பவளம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 29ந்தேதியன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதத்திற்கான சம்பளம் 28-10-2016 அன்று வழங்க, சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
அரசு ஊழியர் சங்கம் அனுப்பிய கோரிக்கை மனுவை ஏற்று அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.