சென்னை: தமிழகஅரசில் பணி ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழகஅரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் பென்தாரர்கள் தங்களது பென்சன் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம் முழுவதும் அறிந்து கொள்ளலாம்.
அதுபோல, 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
வயதான காலத்தில் ஓய்வூதியதாரர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக செல்வதை தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம், முதியோர்கள் எங்கும் செல்லாமல் தங்களுக்கு பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வசதியாக இந்த வலைத்தளம் பயன்படும் வகையில் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஓய்வூதியதாரர் பயன்பெற கேட்டுக்கொள்கின்றோம்.
https://tnpensioner.tn.gov.in/pensionportal/ இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..