நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை ரயில் பாதையை ஒட்டி புதிதாக மதில் சுவர் அமைக்கப்பட்டது.

யானைகள் வழித்தடத்தில் இந்த மதில் சுவர் அமைந்துள்ளதால் அவை தண்ணீர் குடிக்க ரயில் தண்டவாளம் வழியே நடந்து சென்று மறுபுறம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ் நாடு அரசின் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு ஆகியோர் இதனை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட இந்த மதில்சுவரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக அகற்றியது, இதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.