சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த தீவிர நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் காரணமாக சற்றே தணியத் தொடங்கி உள்ளது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டதால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இதையடுத்து , மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கானமுழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94 கீழே இருந்தால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 – 94 உள்ளவர்கள்,மருத்துவமனைக்கு வரக்கூடாது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சையைத் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.