சென்னை: தமிழக அரசு இன்று அறிமுகம் செய்துள்ள வலிமை சிமெண்ட் விலையை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டுக்கு போட்டியாக தமிழக அரசு குறைந்த விலையில் 2 வகையான சிமெண்ட்களை தயாரித்துள்ளது. ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிமெண்ட் இன்று விற்பனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘ சிமெண்டை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிமுகம் செய்து,வலிமை சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வலிமை சிமெண்ட் ரூ.350 மற்றும் ரு.365 விலைகளில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது என்று கூறியவர், தரத்தின் அடிப்படையில் மூட்டை சிமெண்டின் ரூ.350 மற்றும் ரூ.365 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு ,சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.