மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும்த 3 பேர் காயமடைந்து ஊனமடைந்தனர். இவர்கள் 16 பேரின் குடும்பங்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இறந்தவர்கள், படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
‘
வாரிசுகளுக்கு ஏற்கெனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடைப்படையில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, எம்எல்ஏ கீதாஜீவன் உள்பட பலர் உடனிருந்தனர்.