சென்னை:
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் 8வது தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மின்சார பெட்டிகள், குப்பை சேகரிப்பு தொட்டிகள் சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.