சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுதுறை இயக்குனர் அலுவலக பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு ஜூன் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேர்வுக்கான பணிகளை தேர்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் தேர்வுதுறை இயக்குனர் உஷாராணி மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்ற வருகிறது.
[youtube-feed feed=1]