சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  பிப்ரவரி 27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என  அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர்.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது, ஆரம்ப சுகா​தார நிலையமருத்​து​வர்​களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்​கு​வது, நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​து​வப் பணி​யிடங்​கள் உரு​வாக்​கு​வது உள்​ளிட்ட கோரிக்​கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதுதொடர்பாக, அனைத்து அரசு மருத்​து​வர் சங்க கூட்​டமைப்​பின் செயற்​குழு கூட்​டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை , கூட்​டமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன், சாமி​நாதன், அகிலன், சுந்​தரேசன் ஆகியோர் செய்தியாளர்களிம் வெளியிட்டனர்.

அதன்படி,  அரசு மருத்​து​வர்​களின் கோரிக்கை குறித்து முதல்​வரிடம் பேசி தீர்வு காணப்படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் தெரி​வித்​தது வரவேற்​கத்​தக்​கது. எனினும், தீர்வு கிடைக்​கும் வரை போராட்டம் தீவிரப்​படுத்​தப்​படும்.

பிப்​.27-ம் தேதி முதல்​வரின் கவனத்தை ஈர்க்​கும் வித​மாக, அவசர சிகிச்​சைகள் பாதிக்​கப்​ப​டா​மல், வழக்​க​மான பணி​களைப் புறக்​கணித்து ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும்.

அதி​லும் தீர்வு ஏற்​ப​டா​விட்​டால், மார்ச் முதல் வாரத்​தில் சென்​னை​யில் அனைத்து அரசு மருத்​து​வர்​களும் சாகும் வரை பட்​டினி இருக்​கும் போராட்​டத்​தில் ஈடு​படு​வோம்.

இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை கூறுகையில், “மருத்​து​வர், செவிலியர்​கள், மருத்​து​வப் பணி​யாளர்​கள் பணி​யிடங்​களை 2 மடங்​காக அதி​கரிக்க வேண்​டும். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்​படுத்​த வேண்​டும். கொரோனா பேரிடர் காலத்​தில் பணி​யின்​போது உயி​ரிழந்த மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலைக்​கான ஆணை வழங்க வேண்​டும்.

இந்த பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் இந்த அறி​விப்​பு​களை முதல்​வர் வெளி​யிட வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

 

[youtube-feed feed=1]