சென்னை: வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்/

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  2021 – 2022 ஆம் ஆண்டுக்கான  தொழிற்துறை (சுரங்கங்கள் – கனிமங்கள்), தமிழ்வளர்ச்சித்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இன்றைய விவாதத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு பதில்அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்பட இருப்பதாகவும் அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் வலிமை என்ற புதிய வணிக பெயர்கொண்ட சிமெண்டாக இரு இருக்கும் என்றும் கூறிய அமைச்சர், இந்த வலிமை சிமெண்ட்   இந்த ஆண்டே வெளிச்சந்தையில் விற்பனை செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும்,  இதனை அறிமுகப்படுத்த டான்செம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நடிகர் அஜித் நடித்துவரும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வலிமை என்ற நிலையில் அதே பெயரில் தமிழக அரசு சிமெண்ட் அறிமுகப்படுத்த வுள்ளது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.