சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் 2வதுரு அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால்,அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கில் ஏரளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில், நோய்த் தொற்று அதிமுகள்ள திருப்புர், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர், பொதுப்போக்குவரத்தை தொடங்குவது குறித்து விவாதித்துள்ளார். அதைத்தொடர்ந்து, தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், முதல்கட்டமாக நகர பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாவட்டத்திற்குள்ளே பேருந்துகள் இயக்கப்படவும் உத்தரவிடப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வரும் 21ந்தேதி முதல் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.