தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு பேருந்துக்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசு பஸ்சுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டு பைக்கில் வந்த 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பஸ் தீக்கிரையனாது. சம்பவ இடத்தை எஸ்.பி. முரளி ரம்பா பார்வையிட்டு தீ வைத்த நபர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அரசுப் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.