ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ராமேஷ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்து  கவிழ்ந்தது. இந்த விபத்தால்,  அதில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர். பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், மொத்தம்  22 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை வழக்கம்போல,. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூ;ர பகுதியில் சாலையோரம் செல்லும் கால்வாயில்   கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,   22 பேர் காயம் அடைந்தனர் .

இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த  22 பேரும்  காயமடைந்துள்ளனர். இதில் நால்வருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

. விபத்து தகவலறிந்ததும் மீட்புப் பணிக்காக கிரேன் மூலம் பேருந்தை மீட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கிரேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததால் மீட்பு பணிகள் மேலும் சிக்கலாகி, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்வாயில் விழுந்த பேருந்தை மீட்டனர்.