டெல்லி: இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூனில் லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஹலோ உள்ளிட்ட 116 சீன நாட்டின் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.



தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. பப்ஜியை இந்தியாவில் 20 மில்லியன் பேர் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel