
சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் அமளி நடந்ததை அடுத்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்துக்காக இன்று காலை சட்டசபை கூடியது. ஆனால் அமளி ஏற்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் தற்போது அவை கூடியுள்ளது. முன்னதாக, சபையில் புகுந்து தங்களை காவலர்கள் தாக்கியதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து ஆளுநரை சந்தித்து புகார் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர், தனது மும்பை பயணத்தை ரத்து செய்துவிட்டார். இது பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது
Patrikai.com official YouTube Channel