
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது கெளரி கிஷனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோருக்கும் வணக்கம்! எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெரிவிக்க நான் இதை எழுதுகிறேன்.COVID – 19 க்கு நான் நேர்மறையை பரிசோதனை செய்திருக்கிறேன். கடந்த வாரம் முதல் நான் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், அங்கு நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் நான் எனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன். அதுவரை, நான் ஓய்வில், உங்கள் அன்பான வாழ்த்துகளை படிக்கிறேன். ஏனென்றால் அவை நிச்சயமாக வேலை செய்யும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்! நிறைய அன்புடன், கெளரி” என்று தெரிவித்துள்ளார்.
— Gouri G Kishan (@Gourayy) April 2, 2021