
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கவுண்டமணியின் உடல்நிலை குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலில் செய்தி வந்தது.
அவரது நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டதால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். அவர்களே அந்த யூ டியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று தெரிவிக்கப்பட்டது.
கடைசியாக கவுண்டமணி 2016ஆம் ஆண்டு வாய்மை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Patrikai.com official YouTube Channel