ஐதராபாத்: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், தன் பங்கிற்கு ரூ.26 லட்சம் நிதி வழங்கினார்.

இந்தியாவின் பல்துறை விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரணத் திட்டங்களுக்கான நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

பேட்மின்டன் வீராங்கனையும் உலக சாம்பியனுமான சிந்து ஏற்கனவே தன் பங்கிற்கு நிதி வழங்கியிருந்தார். இந்நிலையில், இந்திய பேட்மின்டன் அணி பயிற்சியாளராக இருக்கும் கோபிசந்த், ரூ.26 லட்சத்தை கொரோனா தடுப்பு நிதியாக வழங்கினார்.

இவர் வழங்கிய ரூ.26 லட்சத்தில், ரூ.11 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ.10 லட்சம் தெலுங்கானா மாநில முதல்வர் நிதிக்கும், ரூ.5 லட்சம் ஆந்திர மாநில முதல்வர் நிதிக்கும் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.