சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே மோதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மாநகர காவல் அருண் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

செப்டம்பர் 8ந்தேதி அன்று டிஜிபி அலுவலகம் வந்த ஏர்போர்ட் மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிஜிபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் டிஜிபி அலுவகம் முன்பே தாக்குதல் நடத்தும் அளவுக்கு விசிகவுக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்தது வந்தது என அரசியல் கட்சியினரும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்த விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நெஞ்சுவலிப்பதாக கூறியதால், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.