ஜூன் 1,ஆம் தேதி முதல் குறைந்த பணியாளர்களுடன் கூகுள் அலுவலகம் இயங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை  தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா, இன்று உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து, கூகுள் உள்பட அனைத்த மென்பொருள் நிறுவனங்களும், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவித்து உள்ளது. மேலும்,  இந்தியாவின் முன்னணி ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை கடுமையாக குறைத்துள்ளன.
இந்தியாவில் கொரோனா தாக்கம் மார்ச் மாதத்தில்தான் தலைதூக்கியது. ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற புதுயுக தொழில்நுட்பங்களின் விளைவாக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஊழியர்கள் செய்யக்கூடிய பல்வேறு வேலைகள், ஆட்டோமேஷன் முறையில் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் புதிய ஊழியர்களுக்கான தேவை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் ஜூன் 1ந்தேதி முதல் குறைந்தபட்ச ஊழியர்களுடன் கூகுள் அலவலகம் செய்லபடும் என்றும், தற்போது 5, சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே இருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.