'வொர்க் ஃப்ரம் ஹோம்': 2021 ஜூன் 30 ந்தேதி வரை பணியாற்ற தனது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி..

Must read

டெல்லி:
ந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இந்த நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுள்,  ங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களை வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 30 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  6 முறை ஊரடங்க நீட்டிக்கப்பட்டு, ஜூலை 31ந்தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், தொற்று பரவல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மேலும் தீவிரமடைந்து உள்ளதால், தளர்வுகளுடனான ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்  சமீபத்தில் அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பிரன்சிங் மூலம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தியாவிலும் ஐடி ஊழியர்கள் டிசம்பர் 31ந்தேதி வரை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசாங்கம்  அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம், தனது நிறுவன ஊழியர்களை அடுத்த ஆண்டு (2021) ஜூன் 30நதேதி வரை வீட்டில் இருந்த பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளது.

More articles

Latest article