பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மத்திய அரசு தடை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை பெற நாடு முழுவதும் மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், பலவகையான சிரமங்களும், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதோடு நாடு முழுவது உள்ள ஏடிஎம் மையங்களில் பெரும்பாலானவை இயங்காத சூழலில், பணம் இருப்பு உள்ள ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுவதையும் நாம் காணலாம். மக்களின் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இணையத்தின் மிகப்பெரிய தேடு பொறியான கூகுள், தனது ஹோம் பேஜில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது.
தேடுதலுக்கான இடத்தில் தேவைப்படும் வார்த்தைகளை பதிவு செய்யும் இடத்துக்குக் கீழ் இருக்கும் “ஃபைன்ட் ஆன் ஏடிஎம் நியர் யு” ( Find an ATM near you) வசதி மூலம் அருகே உள்ள ஏடிஎம் நிலையங்களை அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், தற்போதுள்ள அவசியம் கருதி கூகுள் ஹோம் பேஜில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.