கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் மேகக்கணிமை கட்டமைப்பினை மேம்படுத்த  ஆப்பிரிக்கா – ஐரோப்பாவை இணைக்கும் ஆழ்கடல் கேபிள் திட்டம் :  ஈக்வானோ திட்டத்தினை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான முழு செலவையும் கூகிளே செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஆழ்கடல் இணையம் வழியை அளிக்கும் நிறுவனங்களில் கூகிள் மூன்றாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது


உலக அளவில் இணைய இணைப்பினை அதிவேகமாக மாற்றுவதற்காக இந்நிறுவனத்தின் 14 வது ஆழ்கடல் திட்டமாக  ஆப்பிரிக்கா-ஐரோப்பா திட்டம் விளங்குவதாக தெரிவித்துள்ளார்

இந்தப்பணியை அல்காடெல் சப்மரைன் நெட்வொர்க்ஸ்  செய்ய உள்ளது. முதல்கட்டமாக இந்நிறுவனம் தென் ஆப்பிரிக்கா-, போர்ச்சுக்கல்  இடையே ஆழ்கடல் கேபிள் மூலம் 2021ம் ஆண்டு இணைக்கும் என்றும் தெரிவித்தார்

இதேபோல் கடந்த ஏப்ரலில்தான் சிலி -லாஸ் ஏஞ்சல்ஸ் இணைப்பினை கட்டமைத்தது.

உலகின் 99 இணையதள இணைப்பு ஆழ்கடல் கேபிள் மூலமாகத்தான் செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவின் ஜியோ நிறுவனமும் ஆழ்கடல் கேபிள் மூலமாக இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிட்டத்தக்கது

-செல்வமுரளி