சென்னை: தொழில் முதலீடு காரணமாக அமெரிக்காவில் 17நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடியில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.
17நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு ஏராளமான நிறுவன அதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். கடந்த ஒரு வாuமாக சிகாகோவில் முகாமிட்டு தொழில் முதலீடுகளை பெற்று வருகிறார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதுவரை 18 நிறுவனங்கள் உடன் 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
சிகாகோவில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிறுவனம் ஓசூரில் தனது கிளையை திறக்க முடிவு செய்திருக்கிறது. இதுவரை 7,600 கோடி ரூபாய்க்கும் மேலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் லேட்டஸ்டாக ஓசூரில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து சென்னைக்கு விமானம் புறப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் Goodbye, USA! என்று குறிப்பிட்டு அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் இருந்து விடைபெற்று கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.