டில்லி

கொரோனா கவச் எனப் பெயரிடப்பட்டுள்ள கோவிட் 19 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக்  காப்பிட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று மருத்துவச் சிகிச்சைக்காக புதிய கொரோனா கவச் என்னும் காப்பிட்டு திட்டத்துக்குக் காப்பிட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.க்   இந்த சுகாதார காப்பிட்டு பாலிஒசிஒரு குறுகிய கால காப்பிட்டு பாலிசி ஆகும்.  இந்த பாலிசியை அறிமுகம் செய்ய 30 நிறுவனங்களுக்கு ஆணையம் அனுமதி அளித்தது.  அதையொட்டி நிறுவனங்கள் இந்த பாலிசியை மக்களுக்கு அளித்து வருகிறது.

இந்த பாலிசியின் காலக்கெடு மூன்றரை மாதங்களில் இருந்து ஒன்பதரை மாதங்கள் வரையில் ஆகும்.  இதற்கான அதிகபட்ச காப்பீடு தொகை ரூ. 5 லட்சம் ஆகும்.   கடந்த 10 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த பாலிசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவ மனை சிகிச்சைக்கான செலவு முழுவதும் அளிக்கப்படுகிறது.  இதில் 18 வயது முதல் 65 வயது வரையிலானோர் இணைக்கப்படுகின்றனர்.

பொது மக்களில் பலர் இந்த கொரோனா கவச் காப்பீட்டு பாலிசியில் சேர்ந்துள்ளனர்.  இதில் சேருவோரில் பலர் பாலிசியின் கால கட்டமாக ஒன்பதரை மாதங்களைத் தேர்வு செய்துள்ளனர்.   கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதற்காக ஒதுக்கப்பட்ட எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீட்டைப் பெற முடியும் என அறிவ்க்கபட்டுள்ள்து.

இந்த பாலிசி மகாராஷ்டிரா, தமிழகம்,கர்நாடகா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது  இதில் சேருவோர் பலரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவர்களில் பலர் தங்களுக்கு, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு, பெற்றோருக்கு, வாழ்க்கைத் துணையின் பெற்றோருக்கு எனக் காப்பீடு எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.