சுதிர் சந்திர பத்ரி தயாரிபில் நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘குட்லக் சகி’. ஆதி, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட, ‘குட்லக் சகி’ டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடபடுவதாக தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ‘குட்லக் சகி’ படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

“நாங்கள் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகத்தினரிடம் வேண்டுகோள் வைக்கிறேன். அவை எதுவும் உண்மையில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நாங்கள் அதுகுறித்த தகவல்களைத் தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்”. என ‘குட்லக் சகி’ தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.