நல்ல பயன் விளைவை அளிக்கிறது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து?

Must read

நியூயார்க்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித உடலில் நல்ல நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இந்த மருந்தானது நடைமுறை உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், அந்நிறுவனம் தனது தடுப்பு மருந்து அனுமதிக்காக அமெரிக்க மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பை அணுகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பு மருந்தின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட நபர்களில் 90%க்கும் மேலானவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாவதாக அறியப்பட்டுள்ளது. அதாவது, மருந்து எடுத்துக்கொண்ட 29 நாட்களுக்கு அந்த எதிர்ப்பு சக்தி உருவாகிறதாம்.

அதேசமயம், மருந்து எடுத்துக்கொண்ட அனைவருக்கும் 57 நாட்களுக்குள் ஆன்டிபாடிகள் உருவாகிவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நோயெதிர்ப்பு சக்தியானது 71 நாட்களுக்கு உடலில் நீடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் தாக்கம் அறியப்பட்டுள்ளதானது ஒரு நல்ல செய்தி என்றுள்ளனார் அந்நிறுவன ஆராய்ச்சி அதிகாரி பால் ஸ்டாஃபெல்ஸ்.

 

 

More articles

Latest article